கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டுமென, பா.ஜ., ஆன்மிக பிரிவு மனு அளித்துள்ளது.
கடலுார் புதிய கலெக்டர் அருண் தம்புராஜிற்கு, பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் வாழ்த்து தெரிவித்து, அளித்த மனு;
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமாக கூத்தப்பாக்கத்தில் உள்ள இடத்தில் பள்ளி இயங்குகிறது. பள்ளிக்கு மாற்று இடம் தந்து, இந்த இடத்தை காலி செய்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென, ஐகோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது இடத்தை மீட்க வேண்டுமென, கூறப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், தனக்கும் பதில் கடிதம் வந்துள்ளதாகவும் கலெக்டரிடம் அவர் கூறினார்.
பா.ஜ., மாநகரத் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் ஏழுமலை, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாகரன், கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் முத்துக்குமாரசாமி, சசிகுமார் உடனிருந்தனர்.