செஞ்சி : செஞ்சியில் வணிகர் சங்க தலைவராகவும், ராஜா தேசிங்கு கல்வி நிறுவனங்களின் இயக்குனராகவும் இருந்த ராஜேந்திரா எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மனைவி புஷ்பாவதி ஆகியோரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
அதனையொட்டி, இருவரின் படத்திற்கும் மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ராஜேந்திரா எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் சந்திரசேகர், ஜெயஸ்ரீ, ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தரணி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வழக்கறிஞர் தண்டபாணி, வணிகர் சங்க தலைவர் ஆதம், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ்.
ரோட்டரி சங்க தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் குறிஞ்சிவளவன், ராஜேந்திரன், இளங்கோவன், பிரேம், ஜெரால்டு, திருமுறை கழகம் சிவசங்கரன், வடிவேல், ஆடிட்டர் பாண்டியன்.
பா.ம.க., நிர்வாகிகள் சின்னதம்பி, குமார், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம், தொழிலதிபர் ரமேஷ், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட அலுவலர் அறவாழி, ராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர் ராஜாராம் மற்றும் வணிகர் சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.