கடலுார் : கடலுார் முதுநகரில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, கடலுார் முதுநகரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாநகராட்சி கவுன்சிலர் கீர்த்தனா ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்க கடலுார் கிளை செயலாளர் வெங்கட்டரமணன், பொருளாளர் வினோத்குமார், திட்டக்குழுத் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டாக்டர் பிரவீன் அய்யப்பன், முகாமை துவக்கி வைத்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், கர்ணன், பாரூக் அலி, மகேஸ்வரி விஜயக்குமார், ராதிகா பிரேம்குமார், சன் பிரைட் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில், 100க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.