கோவை : இசை எனும் மழையால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கோவை மக்களை நனைய வைத்தார்.
எம்.கே. என்டர்டெயின்மென்ட்ஸ், அன்னபூர்ணா மசாலா, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆயிரத்தில் ஒருவன் நேரடி இசை நிகழ்ச்சி கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,''எனது, 17 ஆண்டுகள் இசைப்பயணத்தில், இதுவரை, 98 பாடல்கள் இசைத்துள்ளேன். முதல் முறையாக கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது பெருமைக்குரிய விசயம். பல பாடல்கள் இசைத்தாலும், இதுபோன்ற நேரடி நிகழ்ச்சி நடத்த காத்திருந்தேன்,'' என்றார்.
பின்னணி பாடகர்கள் சைந்தவி, ஸ்வேதாமோகன், திவாகர், திப்பு, ஹரிணி, மாளவிகா, ஷாலினி, சத்யபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பின்னணி பாடகர்கள் திரைப்பட பாடல்களை பாடினர்.
முன்னதாக, இசைநிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பங்கேற்று , அவர் நடித்து வெளிவர உள்ள 'காதர்பாட்ஷா' எனும் முத்துராமலிங்கம் திரைப்படம் குறித்து எடுத்துரைத்தார். திரைப்படத்தின் கதாநாயகி, சித்தி இத்னானி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இசைநிகழ்ச்சியில், கவிஞர் பா.விஜய், எம்.கே. என்டர்டெயின்மென்ட்ஸின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.