சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 15 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல், 31ம்தேதி வரை, ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு, 45 - 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
கேரளா - தென்கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், மணிக்கு, 45 - 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று மீனம்பாக்கம் மற்றும் திருத்தணியில், மாநிலத்தில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வேலுார் -41; நுங்கம்பாக்கம், மதுரை, பாளையங்கோட்டை - 40; கடலுார், நாகை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி - 39; ஈரோடு, கரூர் பரமத்தி, காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி -38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று, 15 இடங்களில்,100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.