கோவை : லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலக அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை வடவள்ளி நவாவூரை சேர்ந்தவர் துரைசாமி, 78. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலக அதிகாரி வெங்கடேஷ் ஆய்வு செய்தார். லைசன்ஸ் புதுப்பிக்க, 20 ஆயிரம் ரூபாயை வெங்கடேஷ் லஞ்சம் கேட்டுள்ளார்.
பேரம் பேசி, 7 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். துரைசாமி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய, 7 ஆயிரம் ரூபாயை துரைசாமியிடம் கொடுத்து அனுப்பினர்.
வெங்கடேஷ் சார்பில், புரோக்கர் பிரதாப் என்பவர் பால் கம்பெனி அருகே பணத்தை வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார். பிரதாப், வெங்கடேசை கைது செய்தனர்.
போலீசார் இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதில், பிரதாப் வீட்டில் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வெனா, லஞ்சம் வாங்கி கைதான வெங்கடேசை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.