ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை, புதிதாக, 64 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும், 8 மாடி பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 43 கோடி ரூபாயில் அமைக்கப்படும் மேம்பாட்டு பணிகள், வணிக வளாகங்களை ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்டில் நடைபாதை, இருக்கைகள் போன்றவை பயணிகளுக்கு இடையூறு இன்றி அமைக்க யோசனை தெரிவித்தார்.
முன்னதாக சம்பத் நகர் ரேஷன் கடையில் இருப்பு விபரம், பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின், சோலாரில், 63.50 கோடி ரூபாயில் கட்டப்படும் புதிய பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்து, கட்டுமான பணிகள், வணிக வளாகம், வாகன நிறுத்தம், வாகனங்கள் வந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து யோசனைகள் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், குடும்ப நல இணை இயக்குனர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.