ஈரோடு: ஈரோடு, சம்பத் நகரில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் இன்று மாலை, 5:00 மணிக்கு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், இலக்கிய விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
விழாவில், 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்னும் வரலாற்று நுாலை எழுதி, வீரயுக நாயகன் வேள்பாரியை மீண்டும் தமிழர்கள் மனதில் வாழ வைத்த, மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான வெங்கடேசனுக்கு இலக்கிய விருதும், பொற்கிழியும் வழங்கப்பட உள்ளது.
சி.கே.கே. அறக்கட்டளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகிக்கிறார். அறக்கட்டளை புரவலர் தங்கவேலு முன்னிலை வகிக்கிறார். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், பரிசல் கிருஷ்ணா, கார்க்கிபவா, கவிஞர் வெயில் ஆகியோர் பேசுகின்றனர். புரவலர் பாலுசாமி, உடனடி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் செயலாளர் மாணிக்கம் பங்கேற்கின்றனர். அறக்கட்டளை செயலாளர் பிரபு நன்றி கூறுகிறார்.
முன்னதாக நிகழ்ச்சி துவக்கத்தில், வனிதா மணி 'வேள்பாரி கதை சுருக்கத்தை குறும்படமாக ஒளிபரப்பப்பட உள்ளது. இலக்கிய ஆர்வலர்களும், பொதுமக்களும் பங்கேற்கலாம் என அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.