நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி அரச்சலுாரில் அமைந்துள்ளது. 1994ல் தொடங்கப்பட்டது. கல்லுாரி தொடங்கிய காலத்தில் இருந்து, 62 தங்கப்பதக்கங்களும், 392 சிறப்பிடங்களும், 750 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தற்போது வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் ஒரு தங்கப்பதக்கமும், 37 தரவரிசை பட்டியலையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. 21,500 மாணவிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். தமிழக அளவில், மதிப்புமிகு மகளிர் கல்லுாரிக்கான ஒன்பது சிறப்பு விருதுகளை இக்கல்லுாரி பெற்றுள்ளது.
தமிழ், ஆங்கிலம் பேச்சு பயிற்சி, கணிப்பொறி பயிற்சி, மென்திறன் பயிற்சி, தலைமை பண்பு வளர்த்தல், நிர்வாகத்திறன் கற்றல் முதலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., வழிகாட்டுதல் இலவச பயிற்சி தரப்படுகிறது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு, தனித்தனி பயிற்சியாளர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. நவீன வசதிகளுடன், ரூ.10 லட்சம் செலவில் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியாக வேலைவாய்ப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கல்வியாண்டில், 401 மாணவிகள் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். மாணவிகள் தங்கி பயில பாதுகாப்பான விடுதி வளாகத்திலேயே உள்ளது. கல்லுாரிக்கு வந்து செல்ல இலவச பஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தில், 3,000 மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக அளவில், சிறந்த கல்லுாரிக்கான விருதை பெற்றுள்ளது.
கல்லுாரியில், 14 இளங்கலை பட்ட வகுப்புகளும், 12 முதுகலை பட்ட வகுப்புகளும், 10 ஆராய்ச்சி பட்ட வகுப்புகளும், 7 முனைவர் பட்ட வகுப்புகளும் பல துறைகளைச் சார்ந்த சான்றிதழ் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு பயின்ற ஆயிரக்கணக்கான மாணவிகள் அரசு பணிகளில் சேர்ந்து, கல்லுாரிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மத்திய அரசின் நிதி உதவியுடன் MSME Programme நடைபெற்று வருகிறது. கல்லுாரி வளாகத்தில் தி நவரசம் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்பட்டு வருகிறது.