பெருந்துறை, சேனடோரியம், சிலேட்டர் நகர், காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பயின்ற, 78 மாணவ, -மாணவியரும் அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி எஸ்.மௌலிகா, 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம், எஸ்.ஷெரின் ப்ரீத்தா, 581 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், எம்.ஆர்.கிருத்திகா, என்.ராஷ்மிகா ஆகியோர் தலா, 578 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில், 580 மதிப்பெண்களுக்கு மேல் இருவர், 570 மதிப்பெண்களுக்கு மேல் ஐந்து பேர், 560 மதிப்பெண்களுக்கு மேல், 10 பேர், 550 மதிப்பெண்களுக்கு மேல், 19 பேர், 500 மதிப்பெண்களுக்கு மேல், 36 பேரும் பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் மூன்று மாணவர்கள், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒரு மாணவர், 100க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவ, மாணவியர் 10, 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் மாணவன் கோகுலவாணன், 500க்கு 484 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம். மெய்விழி 476 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம், பிரியதர்ஷினி, 471 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவியரை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் பொன்னுசுவாமி பரிசும்,
கேடயமும் வழங்கி பாராட்டினார்.
தாளாளர் பொன்னுசாமி கூறியதாவது:
10,11,12ம் வகுப்புகளில் அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சியுடன், மாணவர்களின் நல் ஒழுக்கத்துடன் துணை நிற்கும் எங்கள் பள்ளி, 34 ஆண்டுகளாக தரமான கல்வியை வழங்கி வருகிறது. வெற்றி பெற்ற மாணவர்கள், அயராது உழைத்த ஆசிரியர்கள்,
பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.