கிராமப்புற மாணவர்களுக்கு, முழுமையான ஆரோக்கியமான கல்வியை அளிப்பதே நோக்கமாக கொண்டு, ஈரோடு மாவட்டம், அரச்சலுார் அருகில் வடுகபட்டி கிராமத்தில், எஸ்.கே.இராஜேந்திரனால், 1987ம் ஆண்டு இராஜேந்திரன் மெட்ரிக் மேல்
நிலைப்பள்ளி துவங்கப்பட்டு, 35 ஆண்டுகளாக கல்விப்பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று இராஜேந்திரன் அகாடமி (CBSE) பள்ளி, 2019ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்று தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதலே JEE, NEET நுழைவுத் தேர்வுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வியில் மட்டுமின்றி கால்பந்து, கூடைப்பந்து மற்றும் தடகள போட்டிகளிலும் மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி சஞ்சனா கூடைப்பந்து விளையாட்டில், இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்துள்ளார்.
இப்பள்ளி மாணவர்கள் Sports quota மூலம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள தலைச்சிறந்த கல்லுாரிகளில் இலவசமாகவும், விளையாட்டிலும் சாதிக்கும் மாணவர்களுக்கு, 100 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர அனுபவம் மிக்க சிறப்பு ஆசிரியர்களால் Chess, Dance, Art & Craft, Silambam, Keyboard, Drums, Yoga, Karate, Scouts and Guide, Band போன்ற பயிற்சிகள் பள்ளி கட்டணத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. Inter School and Intra school competitions, Olympiad, JCI போன்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
நவீன ஆய்வகம், Smart class, நுாலகம் போன்ற வசதிகளுடன் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி
விடுதிகள் உள்ளன.