கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையில், அதிகபட்சமாக பாலவிடுதியில், 58.1 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை, பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 1.4, குளித்தலை, 26, தோகமலை, 8, கிருஷ்ணராயபுரம், 13, மாயனுார், 15, பஞ்சப்பட்டி, 20, கடவூர், 40; பாலவிடுதி, 58.1, மயிலம்பட்டி, 13 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும், சராசரியாக, 16.21 மி.மீ., மழை பதிவானது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 254 கன அடியாக இருந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட் டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை யின் நீர்மட்டம், 63.75 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 785 கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. கிளை வாய்க்கால்களில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 28.67 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப் பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 12.79 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.