பயணிகள் நிழற்கூடம்
கட்ட வேண்டுகோள்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், கரூர் நகருக்கு செல்லும் பகுதியில், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியணை சாலையில் நிழற்கூடம் இல்லை. பழைய
நிழற்கூடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், கலெக்டர்
அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், வெள்ளியணை சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
திருமாநிலையூரில் ஆக்கிரமிப்பு
அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா
கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் வழியாக திருச்சி உள்ளிட்ட, பல மாவட்டங் களுக்கு பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், அந்த பகுதியில் வாகனங்களில் எளிதாக செல்ல முடியவில்லை. விபத்துகள் ஏற்படுகின்றன. பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். விபத்துகளை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், திருமாநிலையூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவு
சுகாதார சீர்கேடால் மக்கள் அவதி
கரூர் - சேலம் பழைய சாலை வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்கிறது. மேலும், வெங்கமேடு பகுதியில், 20 க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன்கள் விற் பனை கடைகள் உள்ளன. அக்கடைகளின் கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமையான நடவடி க்கை எடுக்க, கரூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுபாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.