பள்ளிபாளையம்: ''ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது,'' என, எம்.எல்.ஏ., தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பள்ளிபாளையம் அருகே, அம்மாசிபாளையம் பகுதியில் வீடுதோறும் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம், நேற்று, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும். ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என, இளைஞர்கள், படித்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் உறுப்பினராக சேர்ந்து, கையெழுத்து போட்டுள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆர்வமுடன் அ.தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.