திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பல் மருத்துவ கல்லுாரியின், 14வது பட்டமளிப்பு விழாவை, கல்லுாரி தலைமை செயல் அதிகாரி தியாகராஜா துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் பிரசாத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் மோகன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் சரத்அசோகன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஜோசப், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். டில்லி குரு கோவிந்த் சிங் பல்கலை துணைவேந்தர் பத்மஸ்ரீ மகேஷ்வர்மா, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''பட்டம் பெற்ற மாணவர்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்; உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில் தான் உள்ளது; நோயாளிகளை அன்புடன் அணுக வேண்டும்; மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு தனித்துவம் மிக்கவர்களாக திகழ வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, டாக்டர் இளங்கோவன் தலைமையில், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேராசிரியர் கீதாபிரியா உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். பல்கலை அளவில், 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.