நாமக்கல்: சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தில், 2ம் இடம் பிடித்த, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளருக்கு, நாமக்கல்லில் பாராட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் பணிபுரிந்து வருபவர் உதவி பொறியாளர் ராமகிருஷ்ணசாமி; இவர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய, 'சிவில் சர்வீசஸ்' தேர்வில் வெற்றிபெற்று, தமிழகத்தில், 2-ம் இடமும், அகில இந்திய அளவில், 117வது இடமும் பிடித்து சாதைன படைத்துள்ளார். இதற்காக, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழிற்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்ட சிறு தொழில்கள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோ, அவரை கவுரவித்தார். கோஸ்டல் உணவக நிர்வாக இயக்குனர் அருண் நினைவு பரிசு வழங்கினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ், சேகோ சர்வ் மாவட்ட செயலாளர் முத்துராஜா, அனைத்து மோட்டார் வாகன சங்க தலைவர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.