ராமேஸ்வரம், : தமிழக முதுநிலை டாக்டர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மருத்துவ அறிவியல் கருத்தரங்கு நடத்தப்படும், என டாக்டர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
மே 27, 28ல் ராமேஸ்வரத்தில் இந்திய மருத்துவர்கள் சங்க தமிழக கிளை சார்பில் கருத்தாய்வு நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த முதுநிலை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவர்கள் 400 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு தமிழகத்தின் பல மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 90 டாக்டர்கள் அறிவியல் சார்ந்த தகவல், புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
பின்னர் நடந்த செயற்குழு கூட்டத்தில், முதுநிலை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மருத்துவ அறிவியல்சார்ந்த கருத்தரங்கு நடத்தவும், தமிழகத்தில் நான்கு நகரமாக பிரித்து சிறிய நகரத்தில் இதுபோல் கருத்தரங்கு நடத்தி சிறந்த மருத்துவர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும்.
இதன் மூலம் தமிழகமருத்துவர்கள் உலகமெங்கும் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளது. மேலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு உயர்சிகிச்சை, நடைமுறை மாற்றங்கள், அறிவியல் முன்னேற்றங்களை அறிந்து சாதாரண மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியும், என தீர்மானத்தில் தெரிவித்தனர்.
கருத்தரங்கில் தமிழ்நாடு பொது மருத்துவர்கள் சங்க தலைவர் பிரபு, செயலாளர்பழனியப்பன், பொருளாளர் சந்திரசேகர், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜோசப்ராஜன், செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் வெங்கடாசலபதி உட்பட பலர் பங்கேற்றனர்.