ஈரோடு: அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் பகுதி, ஒன்றிய வார்டு மற்றும் சார்பு அமைப்புகளுக்கான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.,ஏக்கள் சிவசுப்பிரமணி, தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொது செயலாளர் தேர்தலில் ஏகோபித்த வெற்றி பெற்று தேர்தல் கமிஷனின் முழு அங்கீகாரத்தை பெற்ற சட்டசபை எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமிக்கு மாநகர் மாவட்டம் சார்பில் நன்றி தெரிவித்தும், கள்ள சாராயம், போலி மதுபான இறப்பு, கொலை மற்றும் கொள்ளையை கண்டிக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரியும், வீரப்பன்சத்திரத்தில் நாளை (இன்று) காலை நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வினர் பங்கேற்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சோழர் கால செங்கோலை நிறுவி, திறப்பு விழா செய்த பிரதமர் மோடிக்கு நன்றி
தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.