ஈரோடு: ஈரோட்டில், டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில், நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதோடு, வங்கி லாக்கரிலும் சோதனை செய்தனர்.
ஈரோடு, திண்டல், சக்தி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம், 65; தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று, மண்டல, மாவட்ட அளவில் டாஸ்மாக் குடோன்களுக்கும், குடோன்களில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கும், லாரி மூலம் வினியோகிக்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், தொழில் ரீதியாக வரவு-செலவு வைத்துள்ளவர்கள் என, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஈரோட்டில், செங்கோடம்பாளையத்தில் உள்ள, சச்சிதானந்தம் அலுவலகம், பஸ் கம்பெனி உள்ளிட்ட இடங்களில், நான்காவது நாளாக நேற்றும் சோதனை நடந்தது.
இதில் சச்சிதானந் தம் வங்கி லாக்கரிலும் சோதனை நடத்தினர். அப்போது தங்க நகை, ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாக தெரிகிறது. மாலையில் மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு மீண்டும் விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.