ஈரோடு: 'முறையாக நிர்வாக பணிகளை மேற்கொள்ளாததால், மூன்று மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, தி.மு.க., அரசு மருத்துவ மாணவர்களை வஞ்சித்துள்ளது' என, த.மா.கா., குற்றம் சாட்டியுள்ளது.
அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, வெளியிட்ட அறிக்கை:
திருச்சி, தர்மபுரி, சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை, தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. நீட் தேர்வு முடிந்து அட்மிஷன் நடக்கும் நிலையில், அங்கீகாரம் ரத்தாகும் அளவு, மாநில அரசு நடந்து மாணவர்களை வஞ்சித்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாயில் கடலுக்கும் பேனாவை வைக்க முயலும் அரசு, மாணவர்கள் பயிலும் கல்லுாரிக்கான வசதியை செய்யாதது, கேள்விக்குறியாக உள்ளது. 550 சீட்டுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, மருத்துவ கல்லுாரி நிர்வாகம் முறையாக நடந்திருந்தால், இச்சம்பவம் நடந்திருக்காது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.