ஈரோடு: பவானி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் பவானி, சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் பெருமாள், 45, கூலி தொழிலாளி. கடந்த, 2021 ஜூலையில், 14 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தில், பெருமாளை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடந்தது. இதில் பெருமாளுக்கு, 20 ஆண்டு சிறை, 5,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க, அரசுக்கு பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.