ஊத்தங்கரை: தமிழ்நாடு அளவில் பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு இடையே, புத்தாக்க போட்டி நடந்தது. இதில், கோயம்புத்துார் மண்டலத்துக்கு உட்பட்ட, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இயங்கி வரும், அதியமான் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி மாணவியரின் படைப்பு, மாநில அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கல்லுாரி பேராசிரியர் கவிதா வழிகாட்டுதலின்படி, சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில், நெகிழிக்கு மாற்று பொருள்களை கொண்டு, புத்தாக்க படைப்புகளை, வேதியியல் துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவிகளான ஷிபா, கவிப்பிரியா,
மூன்றாமாண்டு மாணவி சுஷ்மிதா ஆகியோர் கொண்ட குழு வழங்கியது.
அதியமான் கல்லுாரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அன்புச்செல்வி, பெரியார் பல்கலை தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, பல்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன கள ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர், கவிச்செல்வன், டேனியல்பிரபாகரன், ஜெயசங்கர், அகமதாபாத்தை சேர்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனர் மற்றும் திட்ட அலுவலர் வீரமணி, இயக்குனர் ஏகலை, அதியமான் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் திருமால் முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா, பிறதுறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவியரை பாராட்டினர்.