ஈரோடு: ஈரோட்டில் நடுரோட்டில் குளித்த வாலிபர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து, போலீசார் அபராதம் விதித்தனர்.
ஈரோட்டில், ப.செ.பார்க் சிக்னலில் நேற்று முன்தினம் மதியம், ஸ்கூட்டரில் வந்த வாலிபர், பிளாஸ்டிக் டப்பில் இருந்த தண்ணீரை, மக்கில் எடுத்து தலையில் ஊற்றி குளித்தார். சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தும் அவர் செல்லவில்லை. சமூக வலைதளத்தில் விடப்பட்ட, ௧௦ ரூபாய் போட்டிக்காக, இவ்வாறு செய்ததும், வெள்ளோட்டை சேர்ந்த பார்த்திபன், 23, என்பதும் தெரிந்தது.
இதுகுறித்து நாளிதழ்களில் நேற்று செய்தி வந்தது. இதை தொடர்ந்து, பார்த்தீபன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த, டவுன் போலீசார், 3,500 ரூபாய் அபராதம் விதித்தனர். தனியார் டூவீலர் விற்பனை செய்யும் நிறுவனத்தில், அவர் பணியாற்றி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.