கிறிஸ் கெயில் உடனான உரையாடலில், 'தோனி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்கிறார் சத்குரு.
மே 28 2023: ஐபிஎல் காய்ச்சல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சத்குரு தனது விருப்பமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸை ஆதரிக்கும் பழைய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. இந்தக் காணொளியில், மேற்கிந்திய கிரிக்கெட்டின் அடையாளமான 'தி யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல் சத்குருவிடம், “உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது?” என்று கேட்கிறார். சத்குரு தனக்கே உரித்தான வெடிச்சிரிப்புடன், “நிச்சயமாக சென்னை அணிதான்,” என்கிறார்.
https://www.instagram.com/p/CsvlB0ePDJ6/
KKR அணியினர் தனது ஆசிகள் வேண்டி தன்னை நாடிய ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றி சத்குரு சொல்லும்போது, “கடந்த முறை KKR அணி இறுதிப் போட்டியில் இருந்தபோது, அவர்கள் என்னை அழைத்து, 'சத்குரு, நீங்கள் எங்கள் அணியை ஆசீர்வதிக்க வேண்டும்' என்றனர். 'யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள்' என்று நான் கேட்டதற்கு அவர்கள், 'சென்னை அணிக்கு எதிராக' என்றார்கள். நான் சொன்னேன், 'அப்படியென்றால், இது ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியாது,” என்றேன் என சத்குரு சொல்ல., கெய்லும் சத்குருவும் சிரித்தனர்.
வீடியோவின் இறுதிப் பகுதியில், ஐபிஎல்-லில் கண்டிப்பாக 'சென்னை தான் நம்பர் ஒன் டீம்' என்று கிறிஸ் கெய்ல் கருத்துத் தெரிவிக்கிறார், அதற்கு சத்குரு, 'தோனி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்' என்று குறிப்பிடுகிறார்.
தற்போதைய ஐபிஎல் சீசனில், சத்குரு RCB மற்றும் CSK அணிகளை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.
https://www.instagram.com/reel/CqkjXAbrkVL/
https://www.instagram.com/reel/Cq9oqTspU6N/
ஆனால் இப்போது, இந்த வீடியோ மீண்டும் வைரலாகி வரும் நிலையில், இந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தங்கள் அணிக்கு சத்குருவின் ஆசிகளும் இருப்பதாக சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக நம்பலாம்.