அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ் பி கே பள்ளிகள் கல்வி குழும தலைவர் ஜெயக்குமார் ஆலோசனையின் படி, பள்ளி தலைவர் ராஜபாண்டியன், செயலர் காசி கோபிநாத் கூறியதாவது:
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை பொது அபிவிருத்தி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்டது எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளி. பெண்களும் கல்வி கற்று ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், ஏழை மாணவிகள் கல்வி பெற்று பயனுற வேண்டும் என்ற குறிக்கோளில் துவங்கப்பட்டது இந்த பள்ளி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. விசாலமான காற்றோட்டமான வகுப்பறைகள், சிசிடிவி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன உபகரணங்கள் கூடிய ஆய்வு கூடங்கள் உள்ளது. நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவிகள் பல விளையாட்டுகளில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி போன்ற சிறப்பு வகுப்புகள் உண்டு. நடனம், பாட்டு, யோகா, பாடம் சாரா வகுப்புகள் நடத்தப்படுகிறது. என்.சி.சி., என்.எஸ். எஸ்., செஞ்சுருள் சங்கம் போன்றவைகள் உள்ளன. மாணவ, மாணவியர்களுக்கு விசாலமான வசதியான விடுதி உள்ளது. நவீன சமையலறை ஆர்ஓ., வாட்டர், சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கி 10 ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் வாங்குபவர்களுக்கும், மேலும் 12 ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேலும் வாங்குபவர்கள் 'ஏகலைவன் விருது' வழங்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவிகளுக்கு, என்ன படிக்கலாம் என்ற கருத்தரங்கு தக்க நிபுணர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 வில் முழு ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பாட பிரிவிலும் 100 க்கு 100 எடுக்கும் மாணவிகளுக்கு தங்கபதக்கம் அணிவிக்கப்படும். அரசு பொது தேர்வில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 வில், 550 க்கு மேல், மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு கர்ணன் விருது வழங்கப்படும்.