சிவகாசி காளீஸ்வரி டிரஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசு அனுமதியுடன் மதுரை காமராஜ் பல்கலைஇணை விசையுடனும் பி.காம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய வேலைவாய்ப்புகள் உள்ள பட்டப்படிப்புகளை ஆ.மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 2000 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லுாரி தற்சமயம் 2140 மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது .
பல்கலைக்கழக மானியக் குழுவால் 2 f மற்றும் 12 b அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாக் மதிப்பீட்டில் A தகுதி பெற்றுள்ளது. 2012 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக மானியக்குழு ,மதுரை காமராஜ் பல்கலையால் வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகின்றது.
பாடப்பிரிவுகள்
இக்கல்லுாரியில் 16 இளங்கலை பட்டப்படிப்புகள், 9 முதுகலை படிப்புகள், மற்றும் 54 சான்றிதழ் படிப்புகள், இரண்டு முதுகலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. மேலும் இந்த கல்வியாண்டு முதல் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவு புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளது.
கட்டமைப்பு வசதிகள்
மாவட்டத்திலேயே மதுரை காமராஜ் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட பி.எஸ்சி., டூரிசம் அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் மிகக் குறைந்த கட்டணத்தில் சிறப்பாக நடத்தி வரும் ஒரே கல்லுாரி நமது கல்லுாரி. இப்பாடப்பிரிவில் இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகள் பலவற்றில் உள்ள முன்னணி நட்சத்திர ஓட்டல்களில் கல்லுாரி மூலம் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். டெல்லியில் உள்ள சுற்றுலா அமைச்சகத்தின் நிதி உதவியின் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது அதன்வழி அவர்களுக்கு அரசு சான்றிதழும் வேலை வாய்ப்பு கிடைக்கபெறும்.
அனைத்து வசதிகளும் பல் துறை ஆய்வகங்கள் குளிரூட்டப்பட்ட கருத்தரங்க அறை , காற்றோட்டமும் வெளிச்சமும் கூடிய விசாலமான வகுப்பறைகள் ,உரிய இருக்கை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கு என கல்லுாரி வளாகத்திலேயே தனித்தனி விடுதி வசதிகள், மேலும் விடுதி மாணவர்கள் உணவு வகைகளை தீர்மானிக்கும் வசதி பன்முக வசதிகள் கூடிய கட்டமைப்பினைக் கொண்டு கல்லுாரி சிறந்து விளங்குகிறது.
கட்டணம்
சுய நிதி கல்லுாரிகளுக்கு என அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தில் மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவது மற்றும் நன்கொடை கிடையாது.
நுாலக வசதி
33ஆயிரத்து 404 க்கும் மேற்பட்ட நுால்களுடன் கூடிய கணினி மயமாக்கப்பட்ட நுாலகம், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காகவும் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய ஹைபிரிட் லைப்ரரி உள்ளது.
பணி வாய்ப்பு
பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்களில் மாணவர்கள் பணி வாய்ப்புகள் பெற வளாக நேர்முகத் தேர்வுகள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தந்துள்ளது. இந்த கல்வியாண்டில் இதுவரை 842 மாணவர்கள் பணி வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.
பேருந்து வசதி
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய நகர்களில் இருந்து பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்ந்து நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகச் சிறப்பாகக் கல்விப் பணியை சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி செய்து வருகிறது.
- ஏ.பி.செல்வராசன், செயலர், காளீஸ்வரி கல்லுாரி.