ஈரோடு:மாநகராட்சி கூட்டத்தில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அ.தி.மு.க., கவுன்சிலரை, தி.மு.க., கவுன்சிலர் அடிக்க பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, மாநகராட்சி பகுதிகளில், 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக குற்றம் சாட்டி, அரசை கடுமையாக விமர்சித்தனர்.
ஆத்திரமடைந்த எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆதிஸ்ரீதர், 31வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெகதீசனை அடிக்க பாய்ந்தார். இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.