திருமங்கலம்:திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 8 விளைபொருட்களுக்கு 'இ நாம்' ஏலமுறையில் விற்பனை நடந்தது.
உசிலம்பட்டி விவசாயியின் 1070 கிலோ வரகு கிலோ ரூ. 34 வீதம் ரூ. 36 ஆயிரத்து 516க்கு விற்றது. சோளபட்டி விவசாயியின் 819 கிலோ சோளம் கிலோ ரூ. 38.50 வீதம், ரூ. 31 ஆயிரத்து 513 வர்த்தகம் நடந்தது. கோவில்பட்டி விவசாயியின் 602 கிலோ சூரியகாந்தி விதைகள் கிலோ ரூ. 46 வீதம் ரூ. 27 ஆயிரத்து 727க்கு வர்த்தகம் நடந்தது.
செங்கப்படை விவசாயியின் 970 கிலோ குதிரைவாலி கிலோ ரூ. 50 வீதம் ரூ. 48 ஆயிரத்து 500க்கும், திருமங்கலம் விவசாயியின் 253 கிலோ நிலக்கடலை பருப்பு கிலோ ரூ. 105 வீதம் ரூ. 26 ஆயிரத்து 460 க்கும், சேடபட்டி சதுரகிரி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை சேர்ந்த 550 கிலோ கம்பு ஒரு கிலோ ரூ. 27 வீதம் 14 ஆயிரத்து 900க்கு விற்பனையானது.
தங்கலாசேரி விவசாயியின் 7,850 கிலோ கம்பு ஒரு கிலோ ரூ. 24 வீதம், மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 400க்கு விற்றது. மற்றொரு விவசாயியின் 3000 மக்காச்சோளம் கிலோ ரூ. 20.80 வீதம் மொத்தம் ரூ.62, 400க்கு விற்றது. திருமங்கலம் வேளாண் சந்தையில் நேற்று 8 வேளாண் விளை பொருட்கள் 12 குவியல்களாக விற்றது மூலம் ரூ. 4 லட்சத்து 37 ஆயிரத்து 689க்கு வர்த்தகம் நடந்தது. விவரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேைஷ 9028152075 ல் தொடர்பு கொள்ளலாம்.