மதுரை:மதுரை செல்லுார் பாலம் அருகே 2021, ஆக.28 ல் போலீசார் ஒரு காரை சோதனை செய்தனர். காரில் இருந்த பண்டல்களில் மரத்துாள் இருந்தன. சந்தேகமடைந்த போலீசார் மதுரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றினர்.
விசாரணையில் மரத்துாளுக்கு இடையே கஞ்சாவை மறைத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. 206 கிலோ மரத்துாள், 74 கிலோ கஞ்சாவை பிரித்தெடுத்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மதுரை காமராஜர்புரம் சரவணகுமார் 29, வில்லாபுரம் ஹாஜிஅலி 36, விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார் கூறுகையில், சரவணகுமார், ஹாஜி அலி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
விஜயகுமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர் விடுதலை செய்யப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய மதுரை போதைப் பொருள் நுண்ணறிவு டி.எஸ்.பி., சம்பத்குமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,க்கு பரிந்துரைக்கப்படுகிறது, என உத்தரவிட்டார்.