ராமநாதபுரம் நகரில் வெளிப்பட்டணத்தில் ஆயிர வைசியா மகாஜன சபை சார்பில் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 1984ல் துவங்கப்பட்டு 1994ல் மெட்ரிக் பள்ளியாகவும், 1997ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஒழுக்கத்திற்கு முதலிடம், அதன் பிறகு படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத்தரப்படுகிறது.
இங்கு படித்த மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவக் கல்லுாரியில் படிக்கின்றனர். இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
மருத்துவக்கல்லுாரி, ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
நவீன அறிவியல் உபகரணங்களுடன் லேப் வசதி உள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பிக்கப்படுகிறது.
கராத்தே, சிலம்பம், நடனம், ஓவியம், யோகா போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
10ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நுாலகம் உள்ளது. பெற்றோர், ஆசிரியர் கழகத்திடம் ஆலோசனை பெறப்பட்டு பள்ளியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.