தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலுார், குன்னுார், பழனி, வால்பாறை, தேனி உள்ளிட்ட பகுதிகளில், 42 ஆயிரம் எக்டர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு உள்ளது. அதில், 35 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சிறு விவசாயிகளின் எண்ணிக்கை, 14 ஆயிரத்து 112. நீலகிரி மாவட்டத்தில் 8,333 ஏக்கர்; தேனியில், 3,758 ஏக்கர்; வால்பாறையில், 2,808 ஏக்கர் அளவுக்கு காபி பயிரிடப்படுகிறது. ஆண்டிற்கு, 20 ஆயிரம் மெட்ரிக் டன் காபி கொட்டைகள் மாநில அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தனி தோட்டங்களாகவும், பிற விவசாய பயிர்களுடன் ஊடுபயிராகவும் காபி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.