கூடலுார்;முதுமலை அருகே மசினகுடி வனப்பகுதியில் துவங்கிய கணக்கெடுப்பு பணியில், 130 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்வட்ட பகுதிகளான, தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலாக்கோட்டை பகுதிகளில் 23 துவங்கி, 28 வரை வன விலங்கு கணக்கெடுப்பு பணி நடந்தது.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சீகூர், சிங்கார, நீலகிரி கிழக்கு வன சரகங்களில், பருவ மழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.
இதற்காக, 34 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட வனப்பகுதிகளில், பிரிவுக்கு மூன்று முதல் நான்கு வன ஊழியர்கள் என, 130 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணியில், நேரடி மற்றும் எச்சம், கால்தடம் போன்ற மறைமுக கணக்கெடுப்பு முறை பின்பற்றப்படுகிறது. இப்பணி வரும், 4ம் தேதி நிறைவு பெறுகிறது.