ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி, ஏராளமான விவசாயிகள், கலெக்டரிடம் மனு வழங்கினர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், கீழ்பவானி கான்கிரீட் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு வழங்கி
கூறியதாவது:
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், சுவர் அமைத்தால் கசிவு நீர் தடைபட்டு, பாசன பகுதியில் உள்ள தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்கள் முற்றிலும் அழிந்துவிடும். நிலத்தடி நீராதாரம் தடைபட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். பொதுமக்கள், கால்நடைகளுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
இத்திட்டத்துக்காக பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
பழைய கட்டுமானங்கள்,
பழுதான அமைப்புக்களை மட்டும் சீரமைத்து கொள்ளலாம். மற்றபடி முழுமையான கான்கிரீட்
திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு வலியுறுத்தினர்.
மனுக்களை பெற்ற கலெக்டர், ''இத்திட்டம் குறித்து கடந்த, 22ல் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 2,799 மனுக்கள் பெறப்பட்டு அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு உள்ளதால், அரசு பரிசீலித்து தீர்வு வழங்கும்,'' என்றார்.