திருநெல்வேலி:திருநெல்வேலி, தச்சநல்லுார் பை - பாஸ் சாலை மேம்பாலத்தில், நேற்று காலை கோவில்பட்டி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. எதிரே வேகமாக வந்த கார், பஸ் மீது மோதி நொறுங்கியது.
காரை ஓட்டிய நபர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். தீயணைப்பு படையினர் காரை மீட்டனர்.
அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் இறந்தவர், சிதம்பரம் நகரைச் சேர்ந்த நீர்காத்தலிங்கம், 39; பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்; குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
சில மாதங்களுக்கு முன், இவர் ஒரு விபத்து வழக்கில் ஜாமின் கோரினார். விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நீதிபதி, இனியும் குடிபோதைக்கு அடிமையாகக் கூடாது என உத்தரவிட்டார்.
அதற்காக, நீர்காத்தலிங்கம் தினமும் இரவு, 10:00 மணிக்கு மேல் குறுக்குத்துறையில் உள்ள டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும் என, வினோத தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.