பாசனம் நடைபெறாத மதுரை கண்மாய்களை கைவிட்றாதீங்க ஆபீசர்ஸ்; ஆக்கரமிப்பில் மெல்ல மெல்ல அழிந்துவருகிறது
Added : ஜூன் 01, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Officers, do not abandon Madurai kanmais where irrigation does not take place; It is slowly being destroyed by occupation   பாசனம் நடைபெறாத மதுரை கண்மாய்களை கைவிட்றாதீங்க ஆபீசர்ஸ்;  ஆக்கரமிப்பில் மெல்ல மெல்ல அழிந்துவருகிறதுமதுரை: நீர்வளத்துறையின் கீழ் உள்ள நீர்ப்பாசனம் நடைபெறாத கண்மாய்களை முறையாக பராமரிக்காததால் அவற்றின் நீர்வழித்தட வாய்க்கால்கள் மறைந்து வருவதோடு கண்மாய்களும் காணாமல் போகும் வாய்ப்புள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் கோச்சடை கண்மாய், பரசுராம்பட்டி, எஸ்.ஆலங்குளம், செல்லுார், ஆத்திகுளம், முடக்காத்தான், பெரியபுளியங்குளம், மானகிரி, செங்குளம், ஓதுவார் கண்மாய், பி.பீ.குளம், கோசாகுளம், சின்னபுளியங்குளம் கண்மாய்களுக்கான பாசனப்பரப்பு குறைந்து வீடுகளாகி விட்டன. இவை அனைத்தும் நீர்வளத்துறையின் கீழ் சங்கிலித்தொடர் போல பாசனபரப்பு கொண்ட கண்மாயாக இருந்தவரை, அதில் தண்ணீர் தேக்கி பராமரிக்கப்பட்டு வந்தது. பாசன வசதி தரும் கண்மாய்களை பராமரிக்க மட்டுமே நீர்வளத்துறையின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் பாசனமில்லா கண்மாய்கள் நல்ல நிலையில் இருந்தாலும் பராமரிப்பு நிதி இல்லாத காரணத்தால் நீர்வளத்துறையினர் இவற்றை கைவிடுகின்றனர்.

கண்மாயை சுற்றி வீடுகளாக மாறிய நிலையில் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களும் மெல்ல ஆக்கிரமிப்பில் சிக்கி, ரோடாக, வீடுகளுக்கான படிக்கட்டாக, சுற்றுச்சுவராக மாறி வருகிறது. போதாகுறைக்கு மாநகராட்சியின் கழிவுநீர் சேகரிக்கப்படும் குட்டையாக மாறிவருகிறது. கண்மாய்களுக்கான வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு நீராதார மையமாக மாற்றினால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கண்மாய் கரையை சுற்றி நடைபாதை அமைத்தால் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். படகு சவாரி விடலாம். மாநகராட்சியின் கழிவுநீர் சேருவதும் தடுக்கப்படும்.

நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன் கூறுகையில் ‛‛நடைபாதை அமைப்பது, படகுசவாரி விடுவதற்கு நிதியில்லை. சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் கண்மாயை பராமரிக்க தடையில்லா சான்று வழங்க தயாராக உள்ளோம். கண்மாய் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்றால் நல்லது தான்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூன்-202307:36:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நிலத்தடி நீர உயரவும், வெள்ளத் தடுப்பு போன்ற நீர் மேலாண்மைக்கும் இயற்கையாக ஏற்பட்டு காலங்காலமாக உள்ள இவைகள பராமரிப்பது அவசியம். ஆக்கிரமிப்புகளில் இருந்து காப்பாற்றுவது அப்பகுதி மக்களின் பொறுப்பு ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X