மதுரை : அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மதுரையில் ஆக.,20ம் தேதி கட்சி மாநாடு நடக்கிறது.
விமான நிலையம் அருகில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லுாரி பகுதியில் நடக்கும் இம்மாநாட்டிற்கு அனுமதி கேட்டு எஸ்.பி., சிவபிரசாத்திடம் மாவட்ட செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார் மனு அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், ''இம்மாநாடு கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் நடத்தப்படும். லோக்சபா, சட்டசபை தேர்தல் வெற்றிக்கான தொடக்கமாக அமையும்'' என்றனர். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ். சரவணன், தவசி, தமிழரசன், நிர்வாகிகள் ரமேஷ், முருகன், இளங்கோவன், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.