கள்ளக்குறிச்சி-பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுதந்திர தின விழாவில், பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு முதல்வரால் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ரொக்கப் பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை விருதாக வழங்கப்படுகிறது. தருதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டராகவும் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
தகுதியுடைய சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
எனவே, விருது பெற விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.