கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அடுத்த பைத்தந்துறையை சேர்ந்தவர்கள் பெரியசாமி, அன்பழகன். இருவருக்கும் இடையே இடப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.
கடந்த 28ம் தேதி இரு தரப்பாக மோதிக்கொண்டனர். இதில், அன்பழகன் உறவினர் தென்செட்டியந்தலை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன், பரமசிவம் மகன் மணிகண்டன் மற்றும் பெரியசாமி தரப்பில் கலையரசி, சோலையம்மாள் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரில், பெரியசாமி, அவரது மனைவி கலைச்செல்வி, வெங்கடேசன் ஆகியோர் மீதும், எதிர் தரப்பில் கதிரவன், லட்சுமி உள்ளிட்ட 10 பேர் என, 13 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கதிரவன்,42; பெரியசாமி,38; கைது செய்யப்பட்டனர்.