ராமநாதபுரம்: பல மாவட்டங்களில், 100 திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு, கிடைத்த பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம், புளிக்கார தெருவை சேர்ந்த பூஜாரி மனோகரன், ராணிசத்திர தெருவை சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் கேசவன், கீழக்கரையில் மோகன் ராஜா வீடுகளில் நகை, பணம் திருட்டு போயின. போலீசாரின் விசாரணையில் சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த ஹரிபிரசாத், 35, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம், 36, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:
இருவரும், ஏர்வாடியில் அறை எடுத்து தங்கி கொள்ளையடித்து உள்ளனர். இருவர் மீதும் மதுரை, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 100 வழக்குகள் உள்ளன. கொள்ளையடித்த பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, இவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதே இல்லை. துணை நடிகைகள் மற்றும் நண்பர்களின் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.