அஸ்தம்பட்டி:சேலத்தில் நுால் வியாபாரி வீட்டில், 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சேலம், மரவனேரி, ஏழாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 66; நுால் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா, 60.
சூரமங்கலத்தில் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்று, இரவு, 10:00 மணிக்கு வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த, 70 சவரன் நகைகளை படுக்கை அறையில் வைத்தார். மற்றொரு அறையில் இருவரும் துாங்கினர்.
அதிகாலை, 2:30 மணிக்கு நகை இருந்த அறையில் சத்தம் கேட்கவே, தம்பதியர் சென்று பார்த்த போது, மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்து ஓடியது தெரிந்தது. வீட்டு முன்புற கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அறையில் வைத்திருந்த, 70 சவரனில், 50 சவரன் நகை கொள்ளை போனது தெரிய வந்தது.
அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, துணை கமிஷனர்கள் லாவண்யா, கவுதம் கோயல், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.