அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
Added : ஜூன் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கரூர்:கரூரில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில், நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கரூர் மாவட்டத்தில், மே, 26 முதல், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த, 26ல் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி, தி.மு.க.,வினர் விரட்டிஅடித்தனர்.

இதனால் சோதனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே, 30ல் கரூர் ஆண்டாங்கோவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அசோக்குமார் ஆஜராக, அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

உடல் நிலையை காரணம் காட்டி, வருமான வரித்துறை அலுவலகத்தில் அசோக்குமார் ஆஜராகவில்லை. இதற்கிடையே, நேற்று மதியம், 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அசோக்குமார் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு, 25க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அசோக்குமாருக்கு மிகவும் நெருக்கமான, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் அலுவலகம், கரூர் செங்குந்தபுரத்தில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் அருகே மாயனுார் எழுதியாம்பட்டியில் உள்ள, சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் நேற்று காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

கரூர், காந்தி நகர் பழனியப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் வீட்டிலும் சோதனை நடந்தது.

கரூர் ராயனுாரில் உள்ள, செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரின் நெருங்கிய நண்பரும், கொங்கு மெஸ் உரிமையாளருமான சுப்ரமணியத்தின் வீடு, கரூர் லாரி மேடு தெருவில் உள்ள, வக்கீல் செங்கோட்டையன் அலுவலகம் ஆகியவற்றிலும், நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், கரூர் அருகே கொங்கு மெஸ்ஸில் வைக்கப்பட்ட சீலை அகற்றி, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.



ரூ.350 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு


வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், 'டாஸ்மாக்' முகவர்கள் என, 40 இடங்களில், மே 26ல் சோதனை துவங்கியது. ஆறு இடங்களில் நேற்றும் சோதனை தொடர்ந்தது. சோதனையில் இதுவரை, 350 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத வருவாய்க்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.வருமான வரி சோதனை செய்ய செல்லும் இடங்களுக்கு, போலீசாரை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடத்துவது எங்கள் பணி.வரி ஏய்ப்பு செய்வோர் தாக்குவர் என பயந்து, எங்கள் வேலையை செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் தாக்கினாலும், நாங்கள் எங்கள் பணியை தொடர்வோம். அதை மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கு, சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வோம். தேவைப்படும் இடங்களுக்கு போலீசாரை அழைப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X