புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி நகராட்சி கமிஷனர், பணி ஓய்வு பெறும் நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.
இதில், இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்ட கொசு மருந்துகள் இருப்பில் இல்லாதது தெரிய வந்தது. அதே சமயம் கொசு மருந்து வாங்கியதாக, திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு, காசோலை வழங்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.
நகராட்சி கமிஷனர் செய்யது உசேன், சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆகியோரை, நகராட்சி நிர்வாக இயக்குனர் சஸ்பெண்ட் செய்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
நகராட்சி கமிஷனர் மே, 31ல் பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.