விழுப்புரம்:விழுப்புரம் கே.கே. ரோடில் 'க்யூ அண்ட் க்யூ' மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
விழாவில், விசாலாட்சி பொன்முடி குத்துவிளக்கேற்றி மருந்தகத்தை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் தங்கம், முருகன், சிவா, புஷ்பராஜ், சக்கரை முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் வரவேற்றார். உரிமையாளர்கள் ரவிச்சந்தின், அமுதா நன்றி கூறினர்.
இந்த மருந்துகடையில், ஜூன் 1 முதல் 30ம் தேதிக்குள், 1,000 ரூபாய்க்கு மருந்து வாங்கினால், கூப்பன் வழங்கப்படும், அதில் தேர்வாகும் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்கூட்டி வழங்கப்படும். 10 பேருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என உரிமையாளர் தெரிவித்தார்.