சேலம்:சேலம், இரும்பாலை அருகே, சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த வீரமணி, 58. சடையாண்டியூரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மகேஸ்வரி, 40, பங்குதாரர்களாக கொண்டு, பூதநாச்சி யார் கோவில் பின்புறம், நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
ஆலையில் நேற்று, 10க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்த போது, மாலை, 4:10 மணிக்கு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், மஜ்ரா கொல்லப்பட்டி சதீஷ்குமார், 41, நடேசன், 50, பழனிசாமி மனைவி பானுமதி, 60, ஆகிய மூவர் உடல் கருகி பலியாகினர். மேலும், ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். பலியான மூவர் குடும்பத்திற்கு, ௩ லட்சம் ரூபாய், காயமடைந்த ஆறு பேருக்கு தலா, ௫௦ ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.