திருச்சி:மலேஷியா மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 72.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம், திருச்சி விமான நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, விமானத்தில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த மூன்று பேரை தனியே அழைத்து விசாரித்தனர்.
அப்போது, மூவரும், உடலில் மறைத்தும், பசைகளாக மாற்றியும், 1,197 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, 72.73 லட்சம் ரூபாய். அதை கடத்தி வந்த, மூன்று பயணியரிடமும், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.