வேலுார்:வேலுாரில், 'ப்ளு டூத்' பொருத்தி தேர்வெழுதி கைதானவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு, மே ௨௭ல் நடந்தது. இதில், வேலுார் மாவட்டத்தில், 10 மையங்களில் தேர்வு நடந்தது.
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில், விருதம்பட்டைச் சேர்ந்த அப்துல் பயாஸ், 27, தேர்வெழுதினார். காதில், 'பேன்டேஜ்' அணிந்து அவர் தேர்வெழுதவே சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர் சரளா, பேன்டேஜை அகற்றி பார்த்தார்.
அப்போது, காதில் ப்ளூ டூத் பொருத்தி, வெளியே இருக்கும் வேறொருவரிடம் விடை கேட்டு எழுதியது தெரிந்தது. காட்பாடி போலீசார் அப்துல் பயாசை தேடினர். கடந்த, 30ல் அவரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.