செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு சிற்பம் ஆய்வாளர்கள் புது தகவல்
Added : ஜூன் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Senchi Fort Raja Desingu sculpture researchers new information   செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு சிற்பம் ஆய்வாளர்கள் புது தகவல்

விழுப்புரம்:'செஞ்சிக்கோட்டை வளாகத்தில் இருப்பது ராஜா தேசிங்கு சிற்பம் இல்லை' என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், செயலாளர் முனுசாமி, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியோர், செஞ்சி கோட்டை வளாகத்தில் உள்ள 2 சிற்பங்களை, கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.

இது குறித்து, ஆய்வாளர்கள் லெனின், முனுசாமி ஆகியோர் கூறியதாவது:

வீரன் ஒருவன் மனைவியுடன் குதிரையில் செல்லும் சிற்பம், இதுநாள் வரை மனைவி ராணிபாய் உடன் ராஜா தேசிங்கு செல்வது என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணியாற்றிய சேஷாத்திரி உள்ளிட்டோர் இந்த கருத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்த சிற்பத்தை ஆய்வு செய்தபோது, வீரன் தனது மார்பில் குழந்தையை அணைத்துச் செல்வது தெரிய வந்துள்ளது.

ராஜா தேசிங்கு, மனைவி ராணி பாய் என்பதும், அவர் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறினார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு குழந்தை இருந்தது குறித்து, எந்த தகவலும் இல்லை. சிற்பத்தில் குழந்தை இருப்பதால், இது ராஜா தேசிங்கு சிற்பம் அல்ல. போரில் உயிர்நீத்த வீரனின் நினைவுக் கல்லாக (சதிக் கல்) இருக்கும்.

கோட்டை வளாகத்தில் உள்ள மற்றொரு சிற்பத்தில், அரசன் வலது கையில் வாள் ஏந்திய நிலையில், குதிரையில் செல்வது போலவும், அவன் பின்னால் அமர்ந்துள்ள பெண் ஒருவர், வெண்கொற்றக்குடை ஏந்தி அமர்ந்து இருப்பது போலவும் உள்ளது.

இந்த சிற்பம் செஞ்சி அருகே அன்னமங்கலத்தில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் பாறை சிற்பத்தை மிகவும் ஒத்துள்ளது. எனவே, இது கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் ஆக இருக்கலாம்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு, 13ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர் கோப்பெருஞ்சிங்கன். தற்போது கோட்டை வளாகத்தில் கண்டறியப்பட்ட சிற்பத்தின் மூலம், செஞ்சிக்கோட்டைக்கும், கோப்பெருஞ்சிங்கனுக்குமான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், செஞ்சி கோட்டையின் வரலாற்றை மேலும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X