சென்னை,தமிழகத்தில் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்பட்டதில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி., நிறுவனத்தின் நட்சத்திர ஹோட்டலுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இது தொடர்பாக, ஐ.டி.சி., சோழா நிறுவனம் அளித்துள்ள விளக்கம்:
நட்சத்திர ஹோட்டல்களுக்கு, அறை வாடகை, விலைப்பட்டியல் அடிப்படையில் சொத்து வரி விதிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், 2022 மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவு, சென்னை மாநகராட்சி தீர்மானம் அடிப்படையில், சிறப்பு வகை கட்டடங்களில் ஹோட்டல்கள் என்ற சிறப்பு பிரிவின் அடிப்படையில், எங்களுக்கு சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, தற்போது அமலில் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.