திருப்பூர்;திருப்பூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த ரவிச்சந்திரன், சேலம் தனித்துணை ஆட்சியராக (முத்திரைத்தாள்) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கோவையில், கலால் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த கணேஷ், நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக இருந்த மகராஜ், அரியலுார் மாவட்டம், உடையர்பாளையம் ஆர்.டி.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக, விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்த ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக இருந்த அம்பாயிரநாதன், சேலம் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, நாமக்கல் உதவி ஆணையர் (கலால்) செல்வி, நியமிக்கப்பட்டுள்ளார்.
தாராபுரம் சப் கலெக்டர் குமரேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக தாராபுரம் ஆர்.டி.ஓ.,வாக கொச்சி் - சேலம் பைப் லைன் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் செந்தில் அரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.