திருப்பூர்;தமிழக சுகாதாரத்துறையின், 108 ஆம்புலன்ஸில், டிரைவர், டெக்னீசியனாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், இன்று (3ம் தேதி) நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனையில், நேர்காணல் இன்று, (3ம் தேதி) காலை, 9:00 முதல் மதியம், 2:00 வரை நடக்கிறது.
டிரைவர் பணிக்கான தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 162.5 செ.மீ., உயரம் கட்டாயம். இலகுரக லைசன்ஸ் எடுத்து மூன்று ஆண்டு, பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். வயது, 24 முதல்,35க்குள் இருத்தல் வேண்டும். இப்பணிக்கு, மாதம் ஊதியம், 15 ஆயிரத்து, 235 ரூபாய்.
'டெக்னீஷியன்' தகுதி
பி.எஸ்.சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., பிளஸ் 2 முடித்து, டி.எம்.எல்.டி., இரண்டு படிப்பு அல்லது பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், உயிரியல்தொழில்நுட்பம் படித்திருத்தல் அவசியம். 19 முதல், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு, மாதம் ஊதியம், 15 ஆயிரத்து, 435 ரூபாய்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு, 50 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 73977 24811, 89255 06308 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.